மோடியின் முகத்தை டாட்டூவாக முதுகில் குத்திய இளம் பெண் !

Default Image

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியை சார்ந்த ரித்தி சர்மா (22).இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது முதுகில் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ குத்தி உள்ளார்.

இது குறித்து ரித்தி சர்மா கூறுகையில் ,நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை , மோடி  நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. மேலும் சமீபத்தில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தத்தை வரவேற்கிறேன்.அதன் மகிழ்ச்சியாகத்தான் தான் பிரதமர் மோடியின் முகத்தை டாட்டூ குத்தியதாக ரித்தி சர்மா கூறினார்.

Image result for Riddhi Sharma tattoo Prime Minister modi

இந்த டாட்டூ  குத்திய வினய் சோனி கூறுகையில் ,நான் பலருடைய முகத்தை டாட்டூவாக குத்தி இருக்கிறேன்.ஆனால் முதல் முறையாக பிரதமர் மோடியின் முகத்தை வரைந்து உள்ளேன். மேலும் இது போன்ற தீவிர ரசிகர்களுக்கு நன்றி என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்