திருப்பூரில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சென்றார். அங்கே அவரை கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர் .பின்னர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.ஒன்றரை மில்லியன் டன் பெட்ரோலிய பொருட்கள் மங்களூர் சேமிப்பு மையத்தையும் , இரண்டரை மில்லியன் டன் சேமிப்பு மையத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து , ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
பின்னர் கர்நாடக மாநில பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். கர்நாடக மாநில முதலமைச்சரை காங்கிரஸ் கட்சியினர் மிரட்டி வருவதாக குற்றம்சாட்டிய மோடி காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக பத்தாண்டு திட்டங்களை வகுத்து 100 பேரில் 25 பேருக்கு மட்டுமே கடன்களை ரத்து செய்து ஏமாற்றுவதாக மோடி குற்றம் சாட்டினார்.