மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது : ராகுல்காந்தி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எனினும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
கலவரத்தை கட்டுப்படுத்த எந்தவித முன் அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 65-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை
நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.#SterliteProtest— Rahul Gandhi (@RahulGandhi) May 23, 2018
இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பதிவில், “தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர், ஏனென்றால் அவர்கள் ஆர் எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு அடிபணிய மறுக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடியின் தோட்டாக்களால் ஒருபோதும் தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்க முடியாது. தமிழ் சகோதர சகோதரிகளே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என்று தமிழில் டுவிட் செய்துள்ளார்.