மஹாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி நாசிக் பகுதியில் பாஜக சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ‘ ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தை நீக்கியது பாஜகவின் குறிக்கோள் அல்ல. அது மக்களின் விருப்பம். அங்குள்ள மக்களும் மற்ற பகுதிகளில் இருக்கும் மக்கள் போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பற்றி சிலர் அதிகப்ரசங்கி தனமாக பேசி வருகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அப்படி வழக்கு வழக்கு நடக்கையில் நம் நாட்டு நீதித்துறையை நம்ப வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், ‘ பாஜக அரசு எப்படி காஷ்மீரில் 370 பிரிவினை அதிரடியாக நீக்கியதோ, அதேபோல அதிரடியாக அயோத்தியில் ராமர்கோவிலை கட்டவேண்டும். நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்க கூடாது. ‘ என சர்ச்சைக்குள்ளாகும் வகையில் பேசியிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் பிரதமர் மோடி பேசியுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவுகிறது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…