பிஜேபியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இல்லையா? வேறு யார்?
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற 23-ஆம் தேதி அனைத்து மக்களவைத் தொகுதிகளில் ரிசல்ட் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஆளும் பாஜக அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது பாஜக கட்சியினரை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அடுத்ததாக பாஜக அதிக இடங்களை கைப்பற்றினாலும் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக முன்னிறுத்த பாஜகதலைமை யோசித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் பொது செயலாளர் பையாஜி ஜோஷி உடன் நிதின் கட்கரி உடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் மோடி அல்லாத பாஜக அரசிற்கு பலரும் ஆதரவு தெரிவித்ததாகவும் தெரிகிறது. பார்க்கலாம் மே 23 அன்று யார் ஜெயிக்கிறார்கள் என்று?! .
DINASUVADU