தாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்ட மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மூன்றுநாள் சுற்று பயணமாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
இந்த நூலை பிரதமர் மோடி, பாங்காக்கில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கினார்.