பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது ! மாலத்தீவு அரசு அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் மிக உயரிய விருதான நிஷான் இசுதீன் விருது வழங்கப்படுகிறது.
இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது.
ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தொடர் வெளிநாட்டு பயணங்களும் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாலத்தீவுகள், கிரிகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி குருவாயூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.இதன் பின்னர் மாலத்தீவிற்கு விமானம் மூலம் கிளம்பினார். மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் ஆகும்.
President @ibusolih has announced his decision to confer on PM of India H.E. @narendramodi the Maldives highest honour accorded to foreign dignitaries, “The Most Honourable Order of the Distinguished Rule of Nishan Izzuddeen” during PM’s visit today. Namaskar, Swagatham ????
— Abdulla Shahid ???? (@abdulla_shahid) June 8, 2019
இந்நிலையில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் மிக உயரிய விருதான நிஷான் இசுதீன் விருது வழங்குவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.