மோடி அவர்களுக்கு நன்றி – ராகுல் காந்தி ட்வீட்

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி ட்வீட்.
சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த விலையுயர்வு சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதளவில் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
அந்த வகையில், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைகள் உயர்ந்தன. பண்டிகை உணர்வு மங்கியது. மோடி அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.
दाम बढ़ता जा रहा है
पेट्रोल-डीज़ल-खाद्य सामान-LPG का
त्योहार का मौसम कर दिया फीका
धन्यवाद है मोदी जी का! #PriceHike pic.twitter.com/BcF5mW3TT4— Rahul Gandhi (@RahulGandhi) October 8, 2021