BREAKING:நாளை காலை 10 மணிக்கு மோடி உரை.!
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை காலை 10 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
Prime Minister @narendramodi will address the nation at 10 AM on 14th April 2020.
— PMO India (@PMOIndia) April 13, 2020
இந்த உரையின் போது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட வாய்ப்பு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 4-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.
ஏற்கனவே அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது பல மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது.
ஒடிஷா , பஞ்சாப் மஹாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீடிக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.