பிரதமர் மோடி Made in India குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், இன்று நாங்கள் உங்களுக்கு ஐந்து உறுதிமொழி அளிக்க நாங்கள் அளிக்கிறோம். தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம். குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். 5 இலட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவோம். 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்குவோம் என தெரிவித்தார்.
பின் பேசிய அவர், நான் மோடி அல்ல, நான் பொய் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் பிரதமர் மோடி Made in India குறித்து பேசுகிறார். ஆனால் அவர் பயன்படுத்தும், மொபைல் போன், சட்டைகளை பார்த்தால் அதில் ‘Made in China’ என்றுதான் இருக்கும். அதில் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருக்காது. ஆனால் நாங்கள் மேட் இன் இந்தியா, மேட் இன் அசாம் என்று இருப்பதை தான் விரும்புகிறோம். இதனை பாஜக செய்யாது என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…