ஒரு போலி செய்தி நாட்டில் புயலை கிளப்பிவிடும்.! பிரதமர் மோடி பேச்சு.! 

Default Image

போலி செய்திகள் நாட்டில் புயலை கிளப்பிவிடும். அதன் உண்மை தன்மையை ஆராய்வது கட்டாயம். – பிரதமர் மோடி பேச்சு 

ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் தொடங்கி, நேற்று இரண்டாவது நாளில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக டெல்லியில் இருந்துகொண்டு கலந்துகொண்டார்.

அதில் பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார். அதில் பேசுகையில், ‘ ஒரு சிறிய போலீ செய்தி நாட்டில் புயலை ஏற்படுத்திவிடும். என குறிப்பிட்டார். மேலும்,  ஒரு செய்தியை பிறருக்கு அனுப்பும் போது அதனை முழுதாக சரிபார்க்க வேண்டும் என கூறினார் .

மேலும் பிரதமர் கூறுகையில், ‘ செய்திகளில் உண்மையினை ஆராய வேண்டும் என மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். போலீ செய்திகளை சரிபார்க்கும் வசதி என்பது கட்டாயம். நாட்டில் வளர்ந்து இருக்கும் தொழில்நுட்பம் இதில் பெரிய பங்கு வைக்கிறது.’ என போலி செய்திகள் பற்றி குறிப்பிட்டு பிரதமர் மோடி தனது கருத்துக்களை காணொளி வாயிலாக உள்துறை ஆலோசனை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்