G20India2023: பைடனில் மாஸ் என்ட்ரி! உலக தலைவர்களை கைகுலுக்கி, சிவப்பு கம்பளத்தில் வரவேற்ற மோடி!
உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாளில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது. அதன்படி மாநாடு தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
G20 நாடுகளின் கூட்டமைப்பில், 21ஆவது நாடாக ஆப்ரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் டெல்லியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் நடந்து முடிந்தன. ஆப்ரிக்க ஒன்றியத்தை G20-ல் இணைப்பதற்கு இந்தியா முன்மொழிந்ததை, ஏற்று பிற நாடுகளும் ஆதரவு தெரிவித்தது. மேலும், இந்த மாநாட்டில் ஆப்ரிக்க ஒன்றியத்தின் தலைவர் அசோமனியும் பங்கேற்றுள்ளார்.
இந்த மாநாடு தொடங்கவதற்கு முன்னதாகவே, இன்று காலை பிரதமர் மோடி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்திற்கு வருகை தரும் உலகக் தலைவர்களை கைகுலுக்கி, சிவப்பு கம்பலத்தில் நின்று வரவேற்றார். மேலும், அவர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த மாட்டிற்கு ஒவ்வொரு நாடு தலைவர்களும் ஒவ்வொரு ஸ்டைலில் வருகை தந்தனர். அதில் குறிப்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெத்தாக கூலிங் கிளாஸ் உடன் என்ட்ரி கொடுத்திருந்தார். அந்த வகையில், அவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
VIDEO | PM Modi welcomes US President Joe Biden at Bharat Mandapam, the venue of G20 Summit in Delhi.#G20India2023 #G20SummitDelhi pic.twitter.com/XanLV3LLB2
— Press Trust of India (@PTI_News) September 9, 2023
நன்றி (PTI_News) நிறுவனம்….