உலகின் நீண்ட அடல் சுரங்க விவகாரம்.. அடிக்கல் நாட்டிய மன்மோகன் கல்வெட்டை காணவில்லை

Default Image

சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில்  உலகின் மிக நீண்ட சுரங்க பாதையை திறந்து வைத்தார் மோடி. இந்த பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது.

இதை, அனைத்து மீடியாக்களிலும், ‘மோடி அரசின் சாதனை’ என, அரசு சார்பில் விளம்பரம் செய்தது. ஆனால், இந்த திட்டத்தை கடந்த  2010ல் அடிக்கல் நாட்டியவர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். இவரால் வைக்கப்பட்ட அந்த அடிக்கல், இப்போது காணப்படவில்லை. மோடி திறந்து வைத்தது மட்டுமே, கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது காங்கிரசுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது. பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவெடுத்து, ஹிமாச்சல் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். இதையடுத்து, இந்த அடிக்கல்லை, காவல்துறையினர்  கண்டுபிடித்தனர். சுரங்க பாதையை கட்டிய நிறுவனத்தின் குடோனில், ஏதோ ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த அடிக்கல் மீட்கப்பட்டது. ஆனால், இந்த அடிக்கல், உடனடியாக சுரங்க பாதையின் வாசலில் வைக்கப்படாது என்கின்றனர் அதிகாரிகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்