அமெரிக்காவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி! எதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது?
அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த விருதினை அமெரிக்காவுக்கான இந்திய தூதர், பிரதமர் மோடியின் சார்பில் இந்த விருதினை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் பெற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, இந்த விருதானது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தியது, உலக அமைதிக்காக சேவை புரிந்ததற்காகஅறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் இதனை பெற்றுக் கொண்டதாக பிரையான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.