டெல்லி : பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார், இதனை ராஜ்நாத் சிங், நட்டா வழிமொழிந்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.-க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
3ஆவது முறையாக அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டம் நிறைவடைந்த உடன், பாஜகவின் மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரின் இல்லங்களுக்கும் சென்று அவர் வாழ்த்து பெற்றார். கடந்த முறை பிரதமராக தேர்வான போதும் இருவரையும் சந்தித்து மோடி வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…