ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி இரங்கல் !
பிரதமர் மோடி விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் டுவிட்டரில் கூறியுள்ளதாவது: விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது சிறந்த எண்ணங்கள், நமது பூமி மற்றும் அண்டத்தில் உள்ள மர்மங்களை குறைத்தன. அவரின் திறமை எப்போதும் பல தலைமுறையினருக்கு முன்மாதிரியாக இருக்கும்.
பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் திறமையான விஞ்ஞானிமற்றும் கல்வியாளர். அவரின் மன உறுதி மற்றும் விடா முயற்சியானது உலகம் முழுவதுமுள்ள மக்களுக்கு முன்மாதிரியானதாக இருக்கும். அவரது மறைவு கவலையளிக்கிறது. பேராசிரியர் ஹாக்கிங்கின் முன்மாதிரியான பணிகள் தான் உலகை சிறந்த இடமாக மாற்றியது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறுகையில், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் மறைவானது அறிவியல் உலகிற்கு மட்டுமல்லாமல், உலகிற்கே பேரிழப்பு என்றார்…
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.