பிரம்மாண்ட வரலாற்று ரயில் பாலம்-இன்று திறக்கிறார் பிரதமர்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில் பாலத்தை பீஹாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
பீஹாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003ம் – 2004ம் ஆண்டில் மத்திய அரசானது ஒப்புதல் அளித்தது. ரூ.516 கோடி மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப் பட்டிருந்த இப்பாலத்தின் கட்டுமான பணிகள் ஆனது கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலமானது திறக்கப்படுவது பீஹார் வரலாற்றில் சிறப்புமிக்க ஒரு தருணமாகும். இதன்மூலம் 86 ஆண்டு கனவானது நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ள நிலையில் இந்த திட்டத்துடன் மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்துவைக்க உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)