குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி.!
டெல்லி : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றியை பெற முடியவில்லை. அதனால், கூட்டணி ஆதரவுடன் மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் நடைபெற்ற NDA கூட்டணியின் கூட்டத்தில், நரேந்திர மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நரேந்திர மோடி மூத்த பாஜக தலைவர்களான லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் மோடி சந்தித்துப் பேசினார்.
இதனை தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்தார். தற்பொழுது குடியரசுத் தலைவர் முர்முவை சந்தித்த மோடி,9-ஆம் தேதி ஆட்சி 3வது முறையாக ஆட்சியமைக்க அவரிடம் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்று கொண்ட திரௌபதி முர்மு, ஆட்சியமைக்க மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.