உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று காலை அயோத்தி புறப்படும் பிரதமர் மோடி அங்கு மூன்று மணி நேரம் செலவிடுகிறார். அப்போது, ஹனுமன் கார்ஹி கோவிலுக்கும் சென்று வழிபடவுள்ளார். கொரோனா காரணமாக இந்த விழாவின் அழைப்பாளர் எண்ணிக்கையை 200-ல் இருந்து 170-ஆக குறைக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். இதையடுத்து, காலை 10.35 மணிக்கு லக்னோ விமான நிலையம் மோடி செல்ல உள்ளார். அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…