தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
உத்தரபிரதேசம் மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மீரட்டின் சர்தானா நகரின் சல்வா மற்றும் காளி கிராமங்களில் சுமார் 700 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகம் கட்டப்படவுள்ளது.
விளையாட்டு பல்கலைக்கழகமானது செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து /கைப்பந்து/கபடி மைதானம், புல்வெளி டென்னிஸ் மைதானங்கள், உடற்பயிற்சி கூடம், செயற்கை ஓட்டம் அரங்கம், நீச்சல் குளம், பல்நோக்கு அரங்கம் மற்றும் ஒரு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
மேலும், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், பளு தூக்குதல், வில்வித்தை, கேனோயிங் மற்றும் கயாக்கிங் உள்ளிட்ட பிற வசதிகளும் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் 540 பெண் மற்றும் 540 ஆண் வீரர்கள் உட்பட 1,080 வீரர்களுக்கான பயிற்சி பெறும் வசதி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025