“ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் – மோடி
மத்திய அரசின் “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டத்தை இன்று அமல்படுத்தப்படுகிறது.
கிராமப்புற இந்தியாவை மாற்றுவதற்கும், மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் ‘ஸ்வாமித்வா’ திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், இந்த வெளியீடு கிட்டத்தட்ட ஒரு லட்சம் சொத்து வைத்திருப்பவர்கள் தங்கள் தொலைபேசிகளில் வழங்கப்பட்ட எஸ்எம்எஸ் இணைப்பு மூலம் தங்கள் சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்ய உதவுகிறது. இதைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசுகள் சொத்து அட்டைகளை விநியோகிப்பார்கள் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அதன்படி, “உத்தரப்பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை” வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
இதன் முலம், கிராமவாசிகள் கடன்களையும் பிற நிதி சலுகைகளையும் எடுத்துக்கொள்வதற்கு சொத்துக்களை நிதிச் சொத்தாகப் பயன்படுத்த வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த காணொளி காட்சியில் பிரதமர் மோடியும் உரையாடுகிறார். மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் கலந்து கொள்வார்கள் .