#Just now: “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டையை தொடங்கி வைத்தார் மோடி.!

Default Image

மத்திய அரசின் “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் இன்று அமல்படுத்தபட்டது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதற்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக இருக்கும்.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சொத்து அட்டை மக்களுக்கு அவர்களின் சொத்துக்கான உரிமையை வழங்கும்” என்று கூறினார். இந்த திட்டத்தின் மூலம், ஒரு லட்சம் சொத்து வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் மொபைல் போன்களில் எஸ்எம்எஸ் இணைப்புகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாநில விவசாயிகள்:-

அதன்படி,  உத்தரப்பிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் கர்நாடகம் ஆகிய 6 மாநில விவசாயிகளுக்கு சொத்து அட்டையினை வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவில் சொத்து அட்டை வழங்க பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படும். எனவே இது ஒரு மாதம் தாமதம் ஆகும்.

இந்த நடவடிக்கை கிராமவாசிகள் கடன்களையும் பிற நிதி சலுகைகளையும் பெற சொத்துக்களை நிதிச் சொத்தாகப் பயன்படுத்த வழி வகுக்கும். மேலும், மில்லியன் கணக்கான கிராமப்புற சொத்து உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் மிக நவீன தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கிய இவ்வளவு பெரிய அளவிலான பயிற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

ஸ்வாமித்வா:-

“ஸ்வாமித்வா” என்பது பஞ்சாயத்து ராஜ் அமைச்சரின் மத்திய துறை திட்டமாகும், இது பிரதமரால் கடந்த ஏப்ரல் 24 அன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் கிராமப்புறங்களில் உள்ள கிராமப்புற வீடுகளின் உரிமையாளர்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதும், சொத்து அட்டைகளை வழங்குவதும் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்