கான்பூர் நகரில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்து, அதில் பயணித்த பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து, முதல் ரயிலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 150 குழந்தைகளுடன் பயணம் செய்தார்.
கான்பூரில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் முழு நீளம் 32 கி.மீ. இது 11,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று கான்பூர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அவர்கள், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அவர் முதல் ரயிலில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் 150 குழந்தைகளுடன் பயணம் செய்தார்.