Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
பிரதமர் மோடி மீதான ‘அவருக்கு குடும்பம் இல்லை’ என்ற லாலுவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் பலர் தங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
அதில், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தங்கள் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தங்கள் பெயருடன் “மோடி கா பரிவார் ” அதாவது நாங்கள் மோடியின் உறவினர் என்ற வாசகத்தை இணைத்துள்ளனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் , ‘மோதியின் குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சொல்லுவதில் பெருமை கொள்கிறேன் ‘ என பதிவிட்டுள்ளார்.
இன்று தெலுங்கானாவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்கள் எனது உறவினர்கள். நான் பாரதத்தின் உறவினர் என உரையாற்றினார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…