நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!

PM Modi - Amit shah - JP Nadda

Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார்.

Read More  – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.!

பிரதமர் மோடி மீதான ‘அவருக்கு குடும்பம் இல்லை’ என்ற லாலுவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட  மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் பலர் தங்கள் எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

Read More – ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

அதில், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தங்கள் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தங்கள் பெயருடன் “மோடி கா பரிவார் ” அதாவது நாங்கள் மோடியின் உறவினர் என்ற வாசகத்தை இணைத்துள்ளனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் , ‘மோதியின் குடும்பத்தின் உறுப்பினரில் ஒருவர் என்று சொல்லுவதில் பெருமை கொள்கிறேன் ‘ என பதிவிட்டுள்ளார்.

Read More – சனாதன பேச்சு…! அமைச்சர் உதயநிதி மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

இன்று தெலுங்கானாவில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்கள் எனது உறவினர்கள். நான் பாரதத்தின் உறவினர் என உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]