கொவைட-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து, பாரத பிரதமர் மோடியின், ‘டுவிட்டர்’ கணக்கில், ஏராளமானோர் பகிர்ந்த கருத்துகளுக்கு, தற்போது அவர் பதில் அளித்துள்ளார். இத்தாலியில் இருந்து பத்திரமாக தன் மகளை அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவித்த ஒருவருக்கு ‘இந்திய மக்களுக்கு எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்வோம்’ என, பதில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மருத்துவர், தன் படத்தை வெளியிட்டு, ‘யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்’ என, கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வை பாராட்டிய பிரதமர் மோடி, ‘நம் பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பாடுபடும் இதுபோன்ற மனிதர்களின் அர்ப்பணிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை’ என,கூறியுள்ளார். மேலும் அவர், ‘அனைத்து ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள்,மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களும் ஒன்றிணைந்து, இந்த பூமியை மிகச் சிறந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : எங்களுக்கு மட்டும் என் இப்படி நடக்குது என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வேதனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.…
குஜராத் : கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய ஆட்டங்கள் எல்லாம் ஐபிஎல் வரலாற்றில்…
2025-ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1-ஆம் தேதி இன்று தங்கம் விலை உயர்ந்த காரணத்தால் நகை வாங்கும் நகைப்பிரியர்கள் கடும்…
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன்…
சென்னை : தமிழகத்தில் நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சக்தி : சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிவனுக்கு காணிக்கை தரும்…