டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 8-ம் தேதியும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைன் ட்விட்டரில் பிரதமர் மோடி, டெல்லி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், அவர் பதிவிட்டுருந்தது, இந்திய மக்கள் பிரதமர் மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கடும் நெருக்கடியால் டெல்லி தேர்தலிலும் பிரதமர் மோடியின் கட்சி தோல்வியை சந்திக்கவேண்டும் என்றும், மோடியின் அற்பத்தனமான பேச்சும், மிரட்டல் போக்கும் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும் காஷ்மீர் விவகாரம், குடியுரிமைத் திருத்தச்சட்டம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மோடி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆதரவை இழந்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி விமர்சித்த பாகிஸ்தான் அமைச்சர் பவாத் ஹூசைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில் நரேந்திர மோடி எங்கள் நாட்டின் பிரதமர், எனக்கும் அவர்தான் பிரதமர். டெல்லி தேர்தல் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை, அதில் தீவிரவாதத்துக்கு ஊற்றுக்கண்ணாகத் திகழும் பாகிஸ்தான் அதில் தலையிடுவதை நாங்கள் பொறுத்திருக்கமாட்டோம். எப்படிப்பட்ட முயற்சிகளைப் பாகிஸ்தான் செய்தாலும், அவர்களால் இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…