ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி "வந்தாரா" எனும் வன விலங்குகள் மீட்பு பாதுகாப்பு மறுசீரமைப்பு மையத்தை துவங்கி வைத்ததுடன், வன விலங்குகளுடன் கொஞ்சி விளையாடினார்.

PMModi -Animals

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நேரத்தில், பிரதமர் மோடி சிங்கம் மற்றும் சிறுத்தை குட்டிகளுக்கு பால் ஊட்டினார், மேலும் பல்வேறு சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட பல விலங்குகளையும் சந்தித்தார்.

ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் காணப்பட்ட கராகல், இப்போது மிகவும் அரிதாகிவிட்டது. அவை வந்தாராவில் ஒரு சிறைப்பிடிக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டத்தின் கீழ், வளர்க்கப்பட்டு பின்னர் காட்டுக்குள் விடப்படுகின்றன. இந்த மையத்தில் 3000 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த வனத்தில், 2000 வகையான உயிரினங்கள் உள்ளன. இங்கு, 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அழிந்து வரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகள் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதில், ஆசிய சிங்கம், பனிச்சிறுத்தை, ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் மற்றும் பல விலங்குகள் அடங்கும். வனத்தை சுற்றிப்பார்த்த பிரதமர், சிங்கக்குட்டி ஒன்றுக்கு பாலூட்டினார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், வந்தாராவில் உள்ள வனவிலங்கு மருத்துவமனைக்கும் பார்வையிட்ட அவர், எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், ஐசியூ மற்றும் பிற வசதிகளுடன் கூடிய கால்நடை மருத்துவமனைகளையும், வனவிலங்கு மயக்க மருந்து, இருதயவியல், சிறுநீரகவியல், எண்டோஸ்கோபி, பல் மருத்துவம், உள் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளையும் பார்வையிட்டார்.

பிரதமர் மோடி மருத்துவமனையின் எம்ஆர்ஐ அறைக்குச் சென்று ஆசிய சிங்கத்தின் எம்ஆர்ஐ ஸ்கேன் படத்தைப் பார்த்தார். மேலும், நெடுஞ்சாலையில் ஒரு காரில் மோதிய சிறுத்தை உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கையும் அவர் பார்வையிட்டார். குறிப்பாக, இங்கு பல்வேறு வசதிகளை நிர்வகிக்கும் மருத்துவர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமர் பெரிய மலைப்பாம்புகள், தனித்துவமான இரண்டு தலை பாம்பு, இரண்டு தலை ஆமை, டாபீர்ஸ், சிறுத்தை குட்டிகள் ஆகியவற்றையும் கண்டு கழித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்