களைகட்டிய ‘ஹௌடி மோடி’ நிகழ்ச்சி! பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் முன்னிலையில் தோன்றிய பிரதமர் மோடி!

Default Image

அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி 7 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் ஹௌடி மோடி எனும் நிகழ்ச்சி இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் முன்னிலையில் மோடி உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் குஜராத் பாரம்பரிய நடனமான தாண்டியா நடனம் மூலம் பிரமாண்ட வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்காக பல்வேறு நடனக்கலைஞர்களை கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்பெஷல் பேருந்தும் இயக்கப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்