கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது என்றும், மோடி அரசின் மாபெரும் தோல்விகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், துரதிருஷ்டம் என்பது தனியாக வருவதில்லை. பொருளாதார பின்னடைவு, கொரோனா பிரச்சினை, சீனாவுடனான எல்லை விவகாரம் என்று சேர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மோடி அரசின் மோசமான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கொரோனா பிரச்சினையில், சுகாதார கட்டமைப்பு குறைபாடு அம்பலம் ஆகியுள்ளது. மத்திய அரசு சொல்லும் ‘உச்சம்‘ எப்போது வரும் என்றே தெரியவில்லை. இப்போது, மாநில அரசுகளிடம் மத்திய அரசு பொறுப்பை மாற்றி விட்டுவிட்டது. ஆனால், கூடுதல் நிதிஉதவி வழங்கவில்லை. மக்கள், தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…