இந்தியாவில் மோடி அரசை காணவில்லை – 20 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பால் ராகுல் விமர்சனம்!
கொரோனா தொற்று 20 லட்சத்தை கடந்துள்ள நிலையில் மோடி தலைமையிலான மத்திய அரசை காணவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் விமர்சித்துள்ளார்.
கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்தியாவிலும் 20 லட்சத்தை தாண்டி கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று 20 லட்சத்தை கடந்து இருந்தாலும் மோடி தலைமையிலான மத்திய அரசை காணவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் விமர்சித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 27 ஆயிரம் ஆக பாதிப்பும், 41 ஆயிரத்தை கடந்து உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா பரவல் சென்றால் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் 20 லட்சம் பேரை எட்டி விடும். மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து பரவலை தடுக்க வேண்டும் என கூறியிருந்தார். கடந்த மாதம் 17-ம் தேதி இவர் டுவிட்டரில் பதிவிடும் போது பத்து லட்சத்தை தான் கடந்து இருந்தது. அடுத்த 20 நாட்களில் அடுத்த பத்து இலட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் பாதிப்பு 20 லட்சத்தை கடந்துள்ளது, அவர் சொன்னபடி 20 லட்சத்தை ஆகஸ்ட் 10 க்கு முன்பதாகவே கண்டுவிட்டதால், மோடி அரசை இன்னும் காணவில்லை என விமர்சித்துள்ளார்.