மோடி அரசுக்கு விவசாயிகள் மீது அக்கறை இல்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அவர்கள் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார். அதாவது வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் 700 பேருக்கும் மரியாதை செலுத்துவோம். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. எனவே ஒவ்வொரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மோடி அரசு விவசாயிகள் மீதும், சாதாரண மக்கள் மீது அக்கறையற்ற தன்மையுடன் செயல்படுகிறது. கலவரம் மற்றும் அண்டை நாடுகளான பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடைபெற வேண்டும். நாடாளுமன்றத்தில் இருந்து 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது முன்னெப்போதுமில்லாத கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…