ஷான்கிரி- லா மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறார் மோடி ..!
இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் 5 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக செவ்வாய்கிழமை அன்று டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அந்நாட்டில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் மோடி, வருகிற 1-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் செல்கிறார்.
அங்கு நடைபெறும் ஷான்கிரி- லா மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். ஆஸ்திரேலியா, புருனே உள்ளிட்ட ஆசியா -பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 22 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட முதல் பிரதமர் மோடி தான் என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பிரீத்தி சரண் கூறியுள்ளார்.