உலகம் தன்னை போலவே உள்ளது என மோடி நினைக்கிறார் – ராகுல் காந்தி
உலகம் தன்னை போலவே உள்ளது என மோடி நினைக்கிறார் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக காட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. அந்த வகையில் தான் ,சோனியா காந்தி தலைவராக இருக்கின்ற ராஜிவ் காந்தி அறக்கட்டளை சீனாவிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக பாஜக தேசிய தலைவர் நட்டா கூறினார் . மேலும் ஹவாலா பரிமாற்றமாக இருந்ததாக கூறினார் .நட்டாவின் கருத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அளித்த பதிலில்,ஒவ்வொரு ரூபாயும் நிவாரணப் பணிகளுக்கு செலவழிக்கப்பட்டு கணக்கு சமர்க்கிப்பட்டது.இதில் என்ன தவறு? 2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு? என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே ‘ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி அறக்கட்டளை , இந்திரா காந்தி அறக்கட்டளை ஆகியவை பெற்ற நிதிகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது .இந்த விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் இந்த விசாரணைக் குழுவுக்கு தலைவராக இருப்பார் என்று தெரிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் , உலகம் தன்னை போலவே உள்ளது என மோடி நினைக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உண்டு அல்லது அவர்களை அச்சுறுத்திவிடலாம் என்றும் நினைக்கிறார். ஆனால் உண்மைக்காக போராடுபவர்களுக்கு ஒருபோதும் எந்த விலையும் கிடையாது அவர்களை அச்சுறுத்திவிடவும் முடியாது என்பது அவருக்கு எப்பொழுதுமே புரியாது என்று பதிவிட்டுள்ளார்.
Mr Modi believes the world is like him. He thinks every one has a price or can be intimidated.
He will never understand that those who fight for the truth have no price and cannot be intimidated.
— Rahul Gandhi (@RahulGandhi) July 8, 2020