வடகிழக்கு மாநிலங்களில் கொழுத்தி போடுகிறது காங்கிரஸ்-பிரதமர் கொதிப்பு

Default Image
  •  குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் பற்ற வைக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
  • ஜார்கண்ட் பொதுகூட்டத்தில் பேசிய பிரமதர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.

பெரும் அமளிகளுக்கு இடையே இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதற்கு கடுமையான எதிர்ப்புகளை எதிர்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலம்-அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் வெடித்தது.

இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,இணைய சேவை துண்டிக்கப்பட்டது.போராட்டம் சற்று குறைந்த நிலையில் அங்கு விதிமுறைகளும் தற்போது தளர்த்தபட்டு வருகின்றது. ஆனால் மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இவ்வாறு பதற்றம் நீடித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் குடியுரிமை சட்ட விவகாரம் மற்றும் அதற்கு எதிராக நடைபெறும் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி எதிர்கட்சியான காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குடியுரிமை சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் பற்ற வைக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் வன்முறைகளுக்கு காங்கிரஸ்தான் காரணம்.இதைத் தவிர  நாட்டை முன்னேற்ற காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை என்று வசைப்பாடி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்