ராகுல் காந்தி, ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்த மோடி!!
- நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி
- நரேந்திர மோடி வேண்டுகோள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆதலால், தேர்தலையொட்டி கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கின.
மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் இத்தேர்தலில், பலவித கிடுகிடுப்புகளை போட்டுள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் விதிமுறைகளை இப்போதிருந்தே அமல்படுத்த துவங்கியது.
இம்முறை, வாக்காளர்கள் வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய விடுமுறைகள் அளித்து, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில். தற்போது பாரத பிரதமர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ரகுல்கந்தி, மம்தா பேனர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தேர்தலை தவிர்க்காமல் வந்து வாக்களிக்கும் வண்ணம் தக்க நடவடிக்கைகளை நீங்களும் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்தில், அதிமுகவுடன் இணைந்துள்ள பாஜக வாக்காளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரச்சாரங்கள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. பாஜகவின் பட்டியலில் விரைவில் தொகுதிகளுடன் அறிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவு:
I appeal to @RahulGandhi, @MamataOfficial, @PawarSpeaks, @Mayawati, @yadavakhilesh, @yadavtejashwi and @mkstalin to encourage increased voter participation in the upcoming Lok Sabha polls. A high turnout augurs well for our democratic fabric.
— Narendra Modi (@narendramodi) March 13, 2019