பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மாநில எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வுக்கு எதிராக, நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் கூடுமாறு அழைப்பு விடுத்தார் .இந்த அழைப்பை ஏற்று நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா,திமுக தலைவர் மு.க ஸ்டாலின், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள்பங்கேற்றனர்.
இதில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ,2019ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும், அடால்ஃப் ஹிட்லர் போன்று நாட்டை ஆட்சி செய்வார்கள்.மீண்டும் பதவிக்கு வந்தால், மோடி, அமித்ஷா இருவரும் தேர்தல் நடைமுறைகளை மாற்றி ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவர். நாட்டு மக்களிடையே இருவரும் மதம், சாதி ரீதியான மோதல்களை தூண்டிவிடுகின்றனர் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…