மோடி – அதானி கனெக்சன்.! பங்கு சந்தையை கவனித்தீர்களா.? ராகுல் காந்தி கேள்வி.!
ராகுல் காந்தி: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் சூழலில், ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இன்று மாலை டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்து வந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில், இன்று பங்குச்சந்தை நிலவரத்தை நீங்கள் கவனித்தீர்களா.? பங்கு சந்தையில் அதானி பங்குகள் இன்று சரிவை சந்தித்து உள்ளன. மக்கள், மோடியை நேரடியாக அதானியடன் தொடர்புபடுத்தி பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அதனால் தான் அதானி பங்குகள் இன்று சரிவடைந்துள்ளது.
மோடி தோற்றுவிட்டால், ‘பங்குசந்தையின் மோடி’ அதானி போய்விடுவார் என மக்கள் தீர்மானித்துவிட்டனர். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது. பாஜக மட்டுமல்ல அது கைப்பற்றியுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் எதிராக தான் நாங்கள் போராடினோம் என செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறினார்.
இன்று பங்குசந்தையில், அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ், அதானி கியாஸ், அதானி வில்மர், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அம்புஜா சிமெண்ட்ஸ் என பல்வேறு அதானி பங்குகள் 9 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.