யார் பெஸ்ட் மோடியா? அம்பானியா? நீதா அம்பானி கொடுத்த நச் பதில்!
2036 ஆம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் என ஹார்வர்ட் இந்தியா மாநாட்டில் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

மாசசூசெட்ஸ் : ஹார்வர்ட் இந்தியா மாநாடு பிப்ரவரி 18-ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விண்ணப்பகர்கள், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களும் பங்கேற்று இந்தியாவின் வளர்ச்சிகள் குறித்தும் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பது பற்றியும் பேசுவார்கள். அப்படி தான் இந்த முறை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி கலந்து கொண்டு பேசியதோடு நகைச்சுவையாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
மாநாட்டில் கேள்வி-பதில் அமர்வில், ஒருவர் நீதா அம்பானியிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பலரும் அவர் தன்னுடைய கணவர் முகேஷ் அம்பானி பெயரை தான் சொல்லப்போகிறார் என எதிர்பார்த்த நிலையில், நீதா அம்பானி இரண்டு பக்கமும் சமமான பதிலை தான் கூறினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நான் நினைக்கிறேன், பிரதமர் மோடி ஜி நாட்டிற்கு நல்லவர், என் கணவர் முகேஷ் என் வீட்டிற்கு நல்லவர்,” என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இதனை கேட்ட அங்கிருந்தவர்கள் சிரிக்கவும் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், மாநாட்டில் பேசிய நீதா அம்பானி ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா விரைவில் நடத்தும் என்பதையும் உறுதியாக தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளை நிச்சயமாக இந்தியா விரைவில் நடத்தும் என்று நம்புகிறேன். உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், ஏற்கனவே, 9 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடித்து விட்டன. இதில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாத நாடு எதுவென்றால் அது இந்தியாவாக தான் இருக்க முடியும். எனவே, 2036 ஆம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் அதனை பார்க்க விரும்புகிறேன்” எனவும் தெரிவித்தார்.