மகுடம் சூடிய பிரதமர் மோடி..! இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக 347 இடங்களில் முன்னிலை பெற்று அரிதி பெரும்பாண்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.இதனிடையே தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன் படி தற்போது இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.