ஓய்ந்துவிட்டதா மோடி அலை!பாஜக தோல்விமுகத்தில் உள்ள நிலையில் போர் தொடுக்கும் சிவசேனா….
பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக தோல்விமுகத்தில் உள்ள நிலையில், நரேந்திர மோடியின் அலை நாட்டில் ஓய்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது.
கடந்த 11ம் தேதி உத்தர பிரதேசத்தின் பூல்பூர்,கோரக்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நடந்தன. இந்த தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
மூன்று தொகுதிகளிலுமே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. உ.பி.யின் இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதியும், பீகாரிின் அரேரியாவில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் முன்னிலை பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.