புது டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 21 காலை 11 மணிக்கு புது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நடைபெறும், முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இதுவாகும். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ல் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி நிறைவடைகிறது.
இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜூலை 21ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுவதால், அக்கட்சியின் பிரதிநிதிகள் யாரும், அன்றைய தினம் நடைபெறும் அனைத்துக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என திரிணாமுல் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…