குடியரசு தலைவரிடம் இந்த தேதியில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மோடி..!அதே தேதியில் பதவியேற்பு ..!
இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.இந்நிலையில் இந்த வெற்றிக்கு மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி மே26 ஆம் தேதி அன்றே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.