இந்தியாவில் மலிவு விலையில் சிகிச்சை அளிப்பது முதன்மை நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.
மலிவு விலையில் சிகிச்சை:
பட்ஜெட்டுக்கு பிந்தைய கூட்டத்தில் உடல்நலம், மருத்துவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் மலிவு விலையில் மருத்துவ சிகிச்சையை வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் மிக உயர்ந்த முன்னுரிமையாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ சிகிச்சையின் பின்னணியில் உள்ள சிந்தனை இதுதான். இதன் கீழ், மருத்துவ சிகிச்சைக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.80,000 கோடி சேமிக்கப்பட்டது.
நவீன சுகாதார கட்டமைப்பு:
கடுமையான நோய்களை தீர்க்க நாட்டில் நவீன சுகாதார கட்டமைப்பு அவசியமானது. சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் சுகாதாரம் பற்றிய அணுகுமுறை, தொலைநோக்கு பார்வை இல்லாதிருந்தது. மக்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் பரிசோதனை வசதிகள் மற்றும் முதலுதவிக்கான சிறந்த வசதிகள் இருக்க வேண்டும் என்ற அம்சத்திலும் அரசாங்கத்தின் கவனம் உள்ளது.
விநியோகச் சங்கிலி:
நாட்டில் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் தயாராகின்றன. நெருக்கடி ஏற்படும் போது, வளமான நாடுகளின் வளர்ந்த அமைப்புகள் கூட வீழ்ச்சி அடைவதை கொரோனா காட்டியது. உலகம் இப்போது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. விநியோகச் சங்கிலி மிக முக்கியமான விஷயமாக மாறிவிட்டது என்பதையும் கொரோனா நமக்குக் கற்றுக் கொடுத்தது.
அனைவருக்கும் சுகாதாரம்:
தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது, சில நாடுகளுக்கு மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற உயிர்காக்கும் விஷயங்களும் கூட ஆயுதங்களாக மாறிவிட்டன. இந்தியாவின் அணுகுமுறை சுகாதாரப் பாதுகாப்புக்கு மட்டும் அல்ல, நாங்கள் ஆரோக்கியத்திற்காகவும் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என அனைவருக்கும் முழுமையான சுகாதாரம் என்ற பார்வையை உலகிற்கு முன் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…