என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!
5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஒரு தகவல்களின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் கட்டணங்களை அதிகரிக்கத் தயாராகி வருகின்றன, இது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு ரீசார்ஜ்கள் இரண்டையும் பாதிக்கும். இதற்குக் காரணம் 5G நெட்வொர்க்கின் வளர்ச்சி என்று கூறப்படுகிறது.
மூலதன தேவை அதிகரித்து வருவதால், வருவாய் அதிகரிக்க கூடிய நோக்கில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10% -20% வரை செல்போன் கட்டணங்களை உயர்த்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடப்பாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள் செல்போன் நிறுவனங்கள் கட்டண உயர்வை அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்வொர்க்கின் தரம் பராமரிக்கப்படுவதற்கும், IoT மற்றும் நிறுவன சேவைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும், ஒவ்வொரு 9 மாதங்களுக்கும் கட்டணங்களை அதிகரிப்பது அவசியம் என்று வோடபோன் ஐடியா தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் முந்த்ரா கூறியிருக்கிறார்.