இன்று புதுச்சேரியில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு.
புதுச்சேரியில் கடந்த 7-ஆம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவர்கள் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின் அவரது வீட்டில் தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.
இந்நிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, 23 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக என்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு இன்று காலை 9 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து, காலை 10 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அரளி, புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…
சென்னை : தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளானதைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி…
அகமதாபாத் : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு முன்பு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…