ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் காங். கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் ஆந்திராவின் 5 துணை முதல்வர்களில் ஒருவராக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த 5 துணை முதல்வர்களும் நாளை பதவியேற்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும் இதன்படி சாதிக்கு ஒரு துணை முதல்வர் என்று ஜெகன் மோகன் நியமனம் செய்யுள்ளார் இது புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.இந்த நியமனம் ஆனது அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் புதிய திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது என்று கூறப்படுகிறது . உச்சபட்ச வெளிப்படைதன்மை மற்றும் ஊழல் இல்லா ஆட்சி என்ற கொள்கையை இதன் முலம் உருவாக்குகிறார் என்று கூறப்படுகிறது.