கேரளாவில் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிபிஎம் எம்.எல்.ஏ. ராஜா வெற்றி செல்லாது.
கேரள மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.ராஜாவின் வெற்றி செல்லாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் :
கடந்த 2021ம் ஆண்டு கேரளா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் ராஜா (A. Raja) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
தமிழில் பேசி பதவியேற்பு :
இதையடுத்து சட்டப் பேரவையில் பதவிப் பிரமாணம் செய்யும்பொழுது அவரது தாய்மொழியான தமிழில் பேசி பதவியேற்றார். ராஜா பதவியேற்றதையடுத்து பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ராஜா, தனித் தொகுதியான தேவிகுளத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார், கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தேர்தல் செல்லாது :
தற்பொழுது இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் மதம் மாறிய ராஜா தனி தொகுதியில் போட்டியிட தகுதி இல்லாதவர் என்றும் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் கேரளா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று தீர்பளித்துள்ள நிலையில் தேவிகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…