ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு இரண்டு கோடி செலவில் மதுசூதன் ரெட்டி எனும் எம்.எல்.ஏ கோவில் ஒன்றை காட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் அம்மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வரும் நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் வரலாற்றிலேயே முதன்முறையாக முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி என்பவரால் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இரண்டு கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஜெகன்னா நவரத்தினா கோவில் நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இருக்கக்கூடிய பணியாளர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் தங்கம் மற்றும் வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் கூட செப்பு இலைகள் மீது பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த கோவிலுக்கு வருவோருக்கு ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் செய்த நல திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிநிதிகளும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முதல்வர் ஒருவருக்கு இத்தனை பிரமாண்டமாக 2 கோடி செலவில் கோவில் கட்டப்பட்டுள்ள சம்பவம் பலரையும் பிரமிப்படைய செய்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…