கேரளாவில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏ, ஏ.ராஜா…!
கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 20-ஆம் தேதி கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது. இந்த நிலையில் இன்று மாநில சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏ-வாக பதவி ஏற்றுள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பி.டி.ஏ.ரகிம் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார்.
மேலும், புதிய சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. சட்டசபை கூட்டத்தொடரில் வருகிற 28-ஆம் தேதி கவர்னர் அரிப் முஹம்மது கான் உரையாற்றுகிறார். ஜூன் 4-ஆம் தேதி, 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.